இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர் நம்மில் அன்பு கூரவேண்டும், நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது நம்மை அவருடைய பிள்ளைகள் என்று அழைக்க வேண்டும் என்று தேவனண்டையில் நாமாகவே கேட்க நமக்கு எந்த உரிமையும் இல்லை! நாம் நீதியைச் பெற்றிருப்பதால் இரட்சிப்பை அதிகாரத்துடன் கேட்க நமக்கு உரிமை இல்லை! நம் அழிந்து போகக்கூடிய மாம்ச சரீரம் மரித்த பின்பு அதை தாண்டி நமக்கான ஜீவனைப் பாதுகாக்கும் வல்லமை நமக்குள் இல்லை! தேவனுடைய அன்பு மாத்திரமே நமக்கு இரட்சிப்பையும் ஜீவனையும் தருகிறது. தேவனின் இரக்கம் இயேசுவின் மூலமாய் மாத்திரமே இன்னமும் அதிகமாய் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது . தேவனின் அன்பான கிருபை மாத்திரமே இரட்சிப்பையும் மெய்யான நம்பிக்கையையும் நமக்கு கொண்டு வர முடியும். தேவனின் ஈவாகிய கிறிஸ்து மட்டுமே மரணம் - பாவத்தின் பிடியிலிருந்து நம்மை எழுப்ப முடியும். ஆனால், “நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே”, “இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர்களாக” இருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்திற்காகவும் தேவனைத் துதியுங்கள். தேவனால் மாத்திரம் , நாம் உயிர்ப்பிக்கப்பட்டு, மகிமையில் வாழ்வது நிச்சயம் (கொலோசெயர் 4:1-3).தேவனின் அன்பை நினைக்கையில் என் வாயினால் சொல்ல வார்த்தையில்லை , "அல்லேலூயா!" என்று உற்சாகமாய் சொல்வதை தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது. "நன்றி தேவனே !"

என்னுடைய ஜெபம்

உம் அன்பும், கிருபையும் , இரக்கமும் எங்களைக் காப்பாற்றின, அன்பான பிதாவே . உம்மைப் போற்றுவதை தவிர நாங்கள் என்ன செய்ய முடியும்? அன்பான தேவனே , எங்களை மீட்பதில் உமது வல்லமையையும், பரிசுத்தத்தையும், மகத்துவத்தையும் காட்டியுள்ளீர்கள். நீர் அளித்த கிருபைக்காக, உமக்காக வாழாமல் நாங்கள் என்ன திருப்பி செய்ய முடியும்? உம்முடைய பொறுமை, உண்மை மற்றும் உறுதியான வாக்கு யாவும் எங்கள் இருதயங்களைத் தொட்டு, எங்களுக்கு ஜீவன் கொடுத்துள்ளது. நாங்கள் உம்மை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கான வார்த்தைகள் அல்லது செயல்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? நன்றி, அன்பான பிதாவே . உம்முடைய அன்பு, கிருபை , இரக்கம் ஆகியவற்றால் எங்களை ஆசீர்வதிக்க நீர் செய்த யாவற்றிற்காகவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து