இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

குழந்தை பருவத்தில் நல்ல ஈவுகளை பெற்றுக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும். அந்த சிறிய பருவத்தில் , ஈவுகளை பெறுவது என்றால் அதை அதிகமாய் நேசித்தேன். அந்த ஈவுகளில் உள்ள முக்கியத்துவத்தைப் பற்றியோ அல்லது அதில் மறைக்கப்பட்ட செய்தியைப் பற்றியோ நான் கவலைப்படவில்லை. அந்த ஈவுடன் இணைக்கப்பட்ட "நிபந்தனைகளை " பற்றி நான் கவலைப்படவில்லை. இது ஒரு ஈவு - நான் அதற்கு தகுதியற்றவன், அது அன்பின் இலவச வெளிப்பாடு, நான் மெய்யாகவே நேசிக்கபட்ட ஒருவரால் எனக்கு கொடுக்கப்பட்டது . தேவனின் பிள்ளையாக , அவருடைய ஈவுகளை பெற்று, அவருடைய பிள்ளையாக விசுவாசத்தின் மூலமாய் இரட்சிப்பின் ஈவை பெற முடியும் என்பதை அறிவது பெரியதல்லவா - தேவனானவர் நம்மீது வைத்திருக்கும் அதீத அன்பின் வெளிப்பாடாக கொடுக்கப்பட்ட ஈவு - நமக்கு தகுதியற்ற ஈவாகும் ஆனால் அதற்கு ஒரு பெரிய விலை இருந்தபோதிலும் அதை வழங்க தேவனுடைய அநாதி சித்தத்தின் காரணமாக நமக்கு இலவசமாக வழங்கப்பட்டது!

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமுள்ள பிதாவே , கிருபையின் ஈவு , விசுவாசத்தின் ஈவு , இரட்சிப்பின் ஈவு , மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவை ஈவாகவும் . இந்த ஈவுகளை என்னால் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது, ஆனால் எப்பொழுதும் "நன்றி!" என்று கூற ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் சொல்ல விரும்புகிறேன் "நன்றி!" இப்போது என் வாழ்க்கை வாழ்வதன் மூலமாகவும் உமக்கு "நன்றி!" உம் மூலமாக விலையுயர்ந்த ஈவு நித்திய வாழ்க்கை அதற்கு நன்றி!. இயேசுவின் நாமத்தினாலே , நான் உமக்கு நன்றியும் துதியும் செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து