இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; இந்தக் காலத்திற்குரிய ஒரு அன்பு நிறைந்த பாடலை போல தெரிகிறதில்லையா?ஆம் , இது ஒரு அன்பு நிறைந்த பாடலேயாகும் ; இந்த பாடல் புதுமையானது அல்ல. வானந்திரத்தில் இருந்தபோது, ​​தாவீது கர்த்தர்மீது கொண்ட வாஞ்சையைப் பற்றி பேசினார். தேவனின் கிருபை இல்லாமல் வாழும் வாழ்க்கை வீணாகிவிடும் என்பதை அவர் உணர்ந்தார். நீங்கள் கடைசியாக எ தேவனே நான் உம்மை நேசிக்கிறேன் என்று எப்பொழுது கூறினீர்கள் ? நீங்கள் கடைசியாக எப்போது இயேசுவுக்காக அன்பு நிறைந்த பாடலைப் பாடினீர்கள்? அந்தக் காலம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அல்லது குறுகியதாக இருந்தாலும் சரி, தேவனின் இரக்கம் உங்களுக்கு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதையும், அவருடைய கிருபை உங்களுக்கு எவ்வளவு விடுதலை அளிக்கிறது என்பதையும், அவருடைய அன்பு உங்கள் ஜீவனை காட்டிலும் எவ்வளவு முக்கியமானது என்பதையும் தெரியப்படுத்த இது சரியான நேரம்.

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , நீர் எனக்காக எவ்வளவு தியாகம் செய்துள்ளீர், எனக்கு எவ்வளவு தயவு பாராட்டினீர் என்று அறிவேன் . என் நன்றி, பாராட்டு மற்றும் மிக முக்கியமாக, உம் மீதான என் அன்பை வெளிப்படுத்த என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. ஆனால், "அன்புள்ள தேவனே , நான் உம்மை நேசிக்கிறேன்" என்று நான் கூறும்போது, ​​என் இருதயத்தின் ஆழத்திலிருந்தும் முழு அர்ப்பணிப்புடனும் ஆவலுடனும் கூறுகிறேன் என்பதை அறிந்து என் வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். இயேசுவின் நாமத்தினாலே , நான் உம்மைப் போற்றி நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து