இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் தொய்ந்த ஆத்துமாவின் தாகத்தைத் தணிக்க நீங்கள் எங்கு திரும்புவீர்கள்? அநேக தீமையான பழக்கங்களும் பாவங்களும் தேவனைத் தேடுவதைத் தவிர்த்து, வேறு சில வழிகளில் நம் ஆத்துமாவின் இந்த தாகத்தைத் திருப்திப்படுத்துவதற்கான விஷயங்களைப் பின்தொடர்வதன் விளைவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையான மற்றும் நீடித்த புத்துணர்ச்சி, திருப்தி மற்றும் நிறைவின் ஆதாரம் தேவன் ஒருவரே . அவரால் மாத்திரமே நம் ஆத்துமாவின் விருப்பங்களைத் திருப்திபடுத்த முடியும் என்பதை அறிந்து, அவரைப் பின்தொடர்வோம். தேவனின் இடத்தில் நாம் தொடரும் மற்ற எல்லா விஷயங்களும் நம்மை வறண்டு போகச் செய்து , நம் ஆத்துமாக்களுக்குத் தேவையான ஜீவத் தண்ணீரைக் காலியாக்கி விடுகின்றன!

என்னுடைய ஜெபம்

தேவனே , என் ஆத்துமா தாகமாக இருப்பதை கவனித்துக்கொண்டதற்காக நன்றி. என் உள்ளத்தில் ஆழமான இந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய பரிசுத்த ஆவியின் மூலமாய் உம் ஜீவத் தண்ணீரை வழங்கியதற்காக நன்றி. திருப்தியின் ஒவ்வொரு பொய்யான ஆதாரத்தின் ஏமாற்றுத்தனத்தையும் பார்க்க எனக்கு உதவுங்கள், இதன்மூலம் நான் என் தாகத்தை சரியாகவும் முழுமையாகவும் உம்மிடம் கண்டுபிடிக்க முடியும். இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்டு ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து