இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிலுவையைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​"கோரமான விபத்து" என்ற வார்த்தைகளை நாம் ஒருபோதும் அதனுடன் இணைக்கக்கூடாது. இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து, முதல் முதல் பெந்தெகொஸ்தே நாளில் சொல்லப்பட்ட செய்தியில், பேதுருவானவர் கூறும்போது சிலுவையில் இரண்டு வெவ்வேறு மாபெரிதான வல்லமையுள்ள காரியங்கள் ஒன்றிணைவதை சுட்டி காண்பிக்கிறார் . சாத்தானவன் ஒரு வழியை வைத்திருந்தான் மற்றும் அவனுடைய தூதர்களின் கிரியையின் மூலமாக தேவ குமாரனை சிலுவைக்கு வரவழைத்தது. இயேசுவை சிலுவையில் அறையப்பட்டதற்கு பின்னால் தேவன் ஒரு காரியத்தை நிர்ணயித்து திட்டமிட்டார், பாவ வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டு, சுத்திகரித்து மற்றும் இரட்சிப்பதற்கான வழியாக அவை மாறும்படி அப்படி செய்தார் . சிலுவை ஒரு விபத்து அல்ல. நரகம் நமது இறுதி தோல்வியை நோக்கமாகக் கொண்டது , ஆனால் தேவனானவர் நமக்கு அதிலிருந்து மீட்பையும் ஜெயத்தையும் கொண்டு வந்தார். எல்லாவற்றிலும் சிறந்தவை மற்றும் மோசமானவை என்னவென்றால் அவை இரண்டும் ஒன்றோடு ஒன்று சந்தித்தது . நிச்சயமாக, இந்த போரில் சிலுவை இறுதி பதில் அல்ல; ஆனால் காலியான கல்லறை மற்றும் உயிர்த்தெழுந்த இயேசுவானவர் பதிலாக இருந்தார். நாம் இந்த மகா கிருபையை பெற்றவர்கள், எவ்வளவு கொடூரமான விலை கொடுக்கப்பட்டு , நம்முடைய மிகப்பெரிய எதிரியால் அது கொடூரமாக நிர்வகிக்கப்படுகிறது . ஆயினும்கூட, கல்லறையின் மீது இயேசுவானவர் ஜெயித்ததின் மூலமாக நம்முடைய இரட்சிப்பைப் பாதுகாக்க தேவன் சிலுவையை நிர்ணயித்தார் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , எங்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருந்ததற்காக உமக்கு நன்றி, எங்கள் பாவங்களை மன்னித்து, உம்முடன் எங்கள் எதிர்காலத்தை உண்டுபண்ணினதற்காக உமக்கு நன்றி . அந்தத் திட்டத்திற்கான மாபெரிதான விலையைச் செலுத்தியதற்காக நன்றி. நரகத்தின் அக்கிரமத்தையும், தீயவர்களின் செயலையும் வென்றதற்காக நன்றி. இயேசுவுக்குள்ளாய் , சிலுவை மரணம் மற்றும் (வெற்றுக் கல்லறையில்) உயிர்த்தெழுதல் மற்றும் நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றிற்காகவும் நாங்கள் உம்மை உள்ளத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறோம். எங்கள் இரட்சகராகிய இயேசுவின் வல்லமையான நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து