இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு நாசரேத்தில் உள்ள தச்சுக் கடையில் வேலை செய்திருக்கும் போது அல்லது கப்பர்நகூமுக்கு அருகில் உள்ள கலிலேயாக் கடல் வழியாக நடந்து சென்றிருக்கும் வேளையில் அப்பொழுது நாம் ஜீவனுடன் இருந்திருந்தால், அவரைப் பார்த்து, “கர்த்தர் அங்கே செல்கிறார்” என்று கூறியிருப்போம். அப்படி சொல்லும் நமது கூற்று மிக சரியாக இருந்திருக்கும். இயேசுவின் அற்புதமான உண்மை என்னவென்றால், அவர் நம்மிடையே தேவனுடைய தற்சுரூபமாய் இருந்தார். மத்தேயு அவரை இம்மானுவேல் என்று அழைக்கிறார், "தேவன் நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23). கொலோசெயர் 1 இல், பவுல் எல்லாவற்றிலும் மற்றும் அனைவருக்கும் இயேசுவின் முக்கியத்துவத்தை விவரிக்கப் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிறந்த வார்த்தைகளையும் இருதயத்திலிருந்து ஆழத்திலிருந்து ஊற்றுகிறார். அவர் மனித சாயலில் வந்த தேவனுடைய தற்சுரூபமானவர் . அவர் ஆளுகை செய்கிறவர், அதீதமானவர், அனைத்து படைப்புகளுக்கும் மேலாக ஆட்சி செய்கிறார். நமது பிரபஞ்சம் உள்ளது மற்றும் இயேசுவால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அவருடைய தியாகத்தின் மூலம் அவரை பூமிக்கு வந்ததினால் அவரை நம்முடைய இரட்சகராக ஆக்குகிறது!

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லயுள்ள தேவனே , நீர் ஏன் எங்களை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உம் ஜனங்களாகிய நாங்கள் நிராகரித்தோம், புறக்கணித்தோம், மறுத்தளித்தோம் , நிந்தித்தோம், உம்மை எங்கள் வாழ்வின் எல்லையில் வைக்க முயன்றோம். இன்னும் மீண்டும் மீண்டும், எங்களின் அழுகையைக் கேட்டு எங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற நீர் இருக்கிறீர் . என்னை மன்னியுங்கள், பிதாவே , உம்மை அதிகமாக கனப் படுத்தவில்லை. இயேசுவின் மகத்துவத்தையும், எனக்காகத் தம்மையே தியாகம் செய்ய அவர் எடுத்த முழு மனத்தாழ்மையையும் அங்கீகரிக்காததற்காக என்னை மன்னியுங்கள். பிதாவே , உமக்கு நன்றி! பொறுமையாகவும், தியாகமாகவும், நீடிய சாந்தத்துடனும் இருப்பதற்கு நன்றி. அன்புள்ள பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே உம்மைப் போற்றுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து