இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு இவ்வுலகத்தை இரட்சிக்க வந்தார். இயேசு உங்களை இரட்சிக்கவும் வந்தார். இயேசு என்னையும் இரட்சிக்க வந்தார். ஏன்? பிதாவானவர் நம்மீது வைத்த அன்பினால் அது உண்டாயிற்று ! இந்த தெளிவான உண்மையைப் பற்றிய மனித வர்ணனைகள் தேவனின் அன்பின் யதார்த்தத்தையும் ஆழத்தையும் குலைத்து போட விடாதீர்கள்! உலகை இரட்சிக்க தேவன் அவருடைய நேசக் குமாரனை அனுப்பினார் - அதில் உங்களையும் என்னையும் இரட்சிப்பதும் அடங்கும் - அவர் அதை இயேசுவின் வாழ்க்கை, மரணம் அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாய் செய்தார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுள்ள பிதாவே , உம் அன்புக்காக நன்றி. நான் அவற்றை சம்பாதிக்கவில்லை அல்லது அதற்கு தகுதியானவன் இல்லை என்று எனக்கு நன்றாய் தெரியும், ஆனால் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உமக்கு நன்றி செலுத்துகிறேன் .நான் உம்மை முகமுகமாய் பார்த்து, உம் சமூகத்திலே உமக்காக எனது துதிகளையும் ஸ்தோத்திரங்களையும் தெரிவிக்கும் வரை, உம்முடைய திட்டம், குமாரன் மற்றும் நீர் அளித்த இரட்சிப்பின் காரணமாக எனது இருதயப்பூர்வமான நன்றியையும் எனது ஆழ்ந்த மற்றும் மாறாத சந்தோஷத்தையும் அறிந்து கொள்ளுங்கள். என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே உமக்கு நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து