இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பாவம் செய்யும் போது மரணமே சம்பளமாக கிடைக்கும், மேலும் நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம் , நம்மீது அன்பு வைத்து நமக்காக விலையேறப்பெற்றதான ஈவை கொடுத்து பாவத்திலிருந்து நம்மை மீட்டுக் கொண்ட தேவனை பாவமானது எதிர்க்க செய்கிறது. அந்த ஈவை இலவசமாகவே நமக்கு கொடுத்தார் - அது இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். நம்மால் அதை விலைக்கொடுத்து வாங்கவோ , அதை பெற்றுக்கொள்ள தகுதி உடையவர்களாகவோ அல்லது உரிமை கோரவோ முடியாது . ஏனெனில் அது தேவனுடைய கிருபையினால் உண்டானது .

என்னுடைய ஜெபம்

தேவனே வேறு ஒருவராலும் செய்ய முடியாத அல்லது அன்புக்கூர முடியாத வேளைகளில் நீர் என்னில் அன்பு கூர்ந்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம் .பரலோகத்தின் மிக விலையேறப்பெற்ற ஈவாகிய இயேசு கிறிஸ்துவை பலியாக கொடுத்து, நான் உம்முடன் இணையும்படி செய்ததற்காக உமக்கு நன்றி. நான் பெற்ற ஈவுகளில் நீர் கொடுத்தது தான் மிகச் சிறந்தது. அவருடைய ஈவினாலே எனக்கு ஜீவன் உண்டாயிற்று அந்த இயேசுவின் மகா நாமத்திலே இந்த துதிகளையும, ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறோம் ! ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து