இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு வீணான வார்த்தைகளுக்கும் தேவனிடம் கணக்கொப்புவிக்கவேண்டும் என்று இயேசு எச்சரிக்கிறார் (மத்தேயு 12:36-37). சமூக ஊடகங்களில் அசிங்கமான, அவதூறான மற்றும் பிளவுப்படுத்தும் வார்த்தைகளால் நிறைந்திருக்கும் நம் காலத்தில், நம் வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுப்பதின் அவசியத்தை குறித்து கர்த்தரின் எச்சரிக்கையை நாம் கேட்க வேண்டும். நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதில் விழிப்புடன் இருக்குமாறும் பவுலானவர் நமக்கு எப்பொழுதும் எச்சரிப்பு கொடுக்கிறார். கிறிஸ்துவை அறியாதவர்கள் மீது நமது தாக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை அப்போஸ்தலர்கள் வலியுறுத்துகின்றனர் . அவிசுவாசிகளின் இருதயங்களை இயேசுவிடம் திறக்க ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக்கொள்ள விரும்ப வேண்டும் . நாம் அன்பையும் இரக்கத்தையும் காண்பிக்க வேண்டும், அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும், மற்றும் நம் வாயின் வார்த்தைகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் அதிக கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் - குறிப்பாக வெளியாட்கள் மற்றும் கிறிஸ்துவுக்குள் உள்ள நமது சகோதர சகோதரிகள் இடையே காண்பிக்க வேண்டும் . வெளியாட்களின் நித்திய வாழ்க்கையின் முடிவு பெரும்பாலும் அவர்களுடனான நமது உரையாடல்களிலும் செயல்களிலும் சார்ந்துள்ளது . அன்பான பேச்சாலும் , கனிவான வார்த்தைகளையும் பயன்படுத்தி, நம் வாயின் வார்த்தைகளை கவனமாக உபயோகிப்போம் . இயேசுவின் கிருபைக்கு மற்றவர்களின் இருதயங்களைத் திறக்க நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் ஜாக்கிரதையாய் பயன்படுத்திக் கொள்வோம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுள்ள தேவனே , நாங்களும் , உம்முடைய மக்களும் , சமூக ஊடகங்களில் சிந்தனையற்ற மற்றும் உணர்ச்சியற்ற பேச்சாலும், இரக்கமற்ற குறிப்பின் மூலமாக சில நேரங்களில் கிறிஸ்துவை அறியாத நம்பிக்கையற்ற ஜனங்களை காயப்படுத்தி, விரட்டும் போது உம்முடைய இருதயத்தை நொறுக்குகிறோம் என்பதை நான் அறிவேன். எல்லா மக்களிடமும், குறிப்பாக இயேசுவைத் தங்கள் இரட்சகராகவும் மீட்பராகவும் இன்னும் அறியாதவர்களிடம் நான் ஒரு வெற்றிகரமான மனப்பான்மையைக் காட்ட முயலும்போது தயவுசெய்து எனக்கு உதவிச் செய்யும் . மக்களின் இருதயங்களை இயேசுவிடம் திருப்பவும், திறக்கவும் என் வாழ்க்கையையும் என் வார்த்தைகளையும் பயன்படுத்தியருளும் . அவருடைய நல்ல நாமத்தினாலே , நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து