இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அறிக்கையிடுவது என்பது நமது பாவத்தில் இரண்டு விஷயங்களைச் செய்வதாகும்: 1) தேவனின் பார்வையில் பாவத்தை அங்கீகரிப்பது மற்றும் 2) நமது இரகசியங்களை அகற்றி மற்றொரு கிறிஸ்தவரிடம் நேர்மையாக இருப்பது. யாக்கோபு ஆசிரியரின் வார்த்தை மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. இந்த அறிக்கையானது மன்னிப்பை மாத்திரம் தருவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார் . இது சொஸ்தமடையவும் செய்கிறது என்று சொல்கிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , நான் பாவம் செய்தேன். நான் இப்போது எனது சொந்த பாவமான ____________ காரியங்களை ஒப்புக்கொள்கிறேன். உம்முடைய மன்னிப்பையும், சோதனையை முறியடிப்பதில் என்னைப் பலப்படுத்த உமது நல்ஆவியையும் வேண்டுகிறேன். நான் உமக்காக வாழ விரும்புகிறேன், என் பாவம், எந்தப் பாவ இச்சையையும் என்னைச் சிக்கவைத்து, உம்மிடமிருந்து என்னை பிரிக்காதிருக்க விரும்புகிறேன். இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து