இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாக கர்த்தராகவே நம்முடன் இருந்தார். அவர் அவருடைய சாயலாகவோ , மாதிரியாகவோ , நகலாகவோ நம்முடன் இல்லை, அவர் நம்மோடு கர்த்தராக இருந்தார். இன்றுவரை, அவர் தனது வார்த்தையினாலே அனைத்து சிருஷ்டிகளையும் தாங்குகிறார் - மிகவும் அதிகமாய் "இயற்கையின் அன்னைக்காக " நிலைநிற்கவும் செய்கிறார் . ஆனால் இப்போதும் நம்மோடு இருக்கும் தேவனாய் மாத்திரமல்ல, நம்மோடு இருந்து நம்முடைய பாவங்களுக்கான விலையையும் கொடுத்திருக்கிறார், இன்னுமாய் நம்மை மீட்டெடுத்து , பிதாவின் வலதுபாரிசத்திலே தேவனுடைய குமாரனாய் வீற்றிருந்து நமக்காக பரிந்தும் பேசுகிறார் . .

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற தேவனே , கடந்த காலங்களில் நீர் பல முறை நடப்பித்தது போல, ஒன்றுமில்லாத மனுஷனுடைய வார்த்தைகளை, நீர் ஒரு நண்பனாகவும், சகோதரனாகவும் இருந்து பிதாவினிடத்தில் அவைகளை கொண்டுபோய் சேர்க்கிறீர். என்னுடைய பாவங்களுக்காக நீர் பலியாக மரித்தற்காக உமக்கு நன்றி. இவ்வுலகத்திலே உம்முடைய நிலையான பிரசன்னம் இருப்பதற்காக நன்றி. நீர் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து எனக்காக அனுதினமும் பிதாவினிடத்தில் பரிந்து பேசுவதற்காக உமக்கு நன்றி. இயேசுவை இரட்சகராக அனுப்பிய மகிமையும், பாராக்கிரமும், பரிசுத்தமும் நிறைந்த தேவனுக்கே கனமும், வல்லமையும் புகழ்ச்சியும்,ஸ்தோத்திரமும் இன்றும் என்றும் சாதகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து