இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பை விளங்கச்செய்தார் , வெறும் வார்த்தைகளினால் மாத்திரமல்ல. தேவன் நம்மை அன்புகூருகிறார் என்று வேத வார்த்தை சொல்லும்போது, ​​அதே வேளையில் அந்த அன்பை வெளிப்படுத்தும் தேவனின் செயல்களை அவை எப்போதும் காண்பிக்கின்றன . இங்கே, தேவனுடைய அன்பு நமக்கு முன்பாக நம்மீது ஊற்றப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும் என்று யோவான் ஆசிரியர் விரும்புகிறார். நாம் அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு முன்பாக தேவன் தம்முடைய அன்பை நம்மோடு அதற்கு முன்னமே பகிர்ந்து கொள்கிறார். அவர் நம்மை நேசிப்பதற்கு ஒரு பாதுகாப்பான சூழல் உண்டாகும் வரை காத்திருக்க மாட்டார். அவருக்கு பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் வரை அவர் காத்திருக்க மாட்டார். அதற்கு பதிலாக, அவர் முதலில் தனது அன்பை இவ்வாறு விளங்கச் செய்தார் - நாம் தகுதியற்றவர்கள் மற்றும் நாம் ஆயத்தமாய் இல்லாதபோது இன்னுமாய் எல்லா நம்பிக்கையும் அற்றுப்போன வேளையில் அந்த மெய்யான அன்பு நம்மை மீட்டுக்கொள்ளும் என்பதை அறியலாம். தேவன் அன்பாயிருக்கிறார் , நாம் அவரை நேசிக்கத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே அவருடைய அன்பு என்ன செய்கிறது, செய்திருக்கிறது மற்றும் எதை நமக்குக் கொடுக்கும் என்பதன் காரணமாக இதை நாம் அறிவோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோகத்தின் பிதாவே , என்னை மிகவும் அதிகமாக நேசித்ததற்காக உமக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் என் பாதையில் நீர் கொண்டு வரும் மற்றவர்களை நேசிக்கும் வாய்ப்புகளை காண எனக்கு உதவியருளும் . அன்புள்ள பிதாவே , இன்றும் என் வாழ்வின் வரும் நாட்களிலும் உம்முடைய மாசற்ற அன்பை யாரிடமாவது வெளிப்படுத்த என்னை எடுத்து பயன்படுத்தியருளும் . என் வாழ்க்கையில் அன்புடன் யாவரையும் முதலில் சந்திக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து