இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது இளைஞர்களின் இலட்சிய உணர்வுகளை நாம் நிராகரிக்கக் கூடாது. நீங்கள் இளைஞராக இருந்தால், நீங்கள் நாளைய சபையின் ஒரு பகுதி மாத்திரமல்ல , இன்று நீங்கள் தேவனுடைய ஊழியரும் கூட. அவருக்கு அதிக பெலத்துடன் ஊழியம் செய்து, வயதில் முதிந்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருங்கள்! நீங்கள் வயது முதிர்ந்தவராக இருந்தால், இளைஞர்களின் உற்சாகத்தை அசட்டையாய் பார்க்காதீர்கள், மாறாக அவர்களை ஊக்குவியுங்கள் அதை பின்தொடரும்படி உற்சாகப்படுத்துங்கள். இன்னுமாய் நம்முடைய இளைய விசுவாசிகள் தங்கள் ஆற்றல், ஈவு மற்றும் திறன்களை தேவனை மகிமைப்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று ஜெபியுங்கள். நம் தேவனுக்கு துடிப்பான நம்பிக்கையுடன் ஊழியம் செய்யும் வாலிபர்களே நமது சிறந்த உதாரணங்களில் சிலர் என்பதை நினைவில் கொள்வோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , இளமைப் பருவத்திலோ அல்லது இயேசுவின் சீஷர்களாக முதல் ஆண்டில் உள்ள ஆற்றல் மிக்க, ஆர்வமுள்ள, உணர்ச்சிமிக்க கிறிஸ்தவர்களுக்காக உமக்கு மிக்க நன்றி.. அவர்களின் சாட்சியுள்ள வாழ்க்கையை பெலப்படுத்துங்கள் , அவர்களின் ஊழியத்தை ஆசீர்வதித்தருளும் , உம்முடைய ஊழியத்தில் அவர்கள் வளர்ந்து முதிர்ச்சியடையும் போது அவர்களின் இருதயங்களை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள் . இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து