இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"ஆண்டவருக்குச் சித்தமானால் !" நீங்கள் உங்கள் வாழ்க்கையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டமிடல் செய்கிறீர்களா? ஆம் நான் அப்படி செய்கிறேன் . ஆனால் எனது திட்டமிடல் எப்போதுமே ஒரு கண்ணுக்கு புலன்படாத குறியீட்டைக் கொண்டிருக்கும்: அது என்னவென்றால் "தேவனே , இது உம் சித்தமும், நேரமும் என்றால், இந்தத் திட்டங்களை அடியேன் முடிக்க எனக்கு உதவுங்கள்." உம்முடைய திட்டங்களை குறித்து எனக்கு அதிகமாய் தெரியாது, ஆனால் நான் அவரிடம் என்னுடைய எதிர்கால காரியங்களை அவர் கரங்களில் ஒப்புக்கொடுத்தால் , எனது திட்டமிடலை காட்டிலும் அவரது நேரமும் திட்டமிடலும் எப்போதும் சிறப்பானது என்பதை தேவனானவர் எனக்கு மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி காட்டியுள்ளார். நான் என் வாழ்க்கையில் திட்டமிடுவதை விட்டுவிட்டேன் என்று அர்த்தமா? இல்லை. நான் ஜெபத்துடன் திட்டமிடுகிறேன், ஞானத்தையும் பரிசுத்த ஆவியையும் கேட்டுக்கொள்கிறேன், தேவனுடைய நேரத்தை அறியவும் அவருடைய சித்தத்தை புரிந்து அவருடைய நேரத்தில் அவைகளை செய்யவும் எனக்கு உதவுங்கள் (யாக்கோபு 1:5-6; எபேசியர் 5:15-18). நம்முடைய வாழ்க்கை மிகவும் குறுகியது ஆதலால் திட்டமிடல் கூடாதா?. ஜெபத்துடன் திட்டமிடாமல், பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதைத் தேடாமல் இருப்பதற்கு வாழ்க்கை மிகவும் முக்கியமானதா?

என்னுடைய ஜெபம்

என் சித்தம் அல்ல, பிதாவே , உம்முடைய சித்தத்தின் படி ஆகக்கடவது..... இந்த நாள் மட்டும் அல்ல என் வாழ்வின் எல்லா நாட்களிலும் அப்படி ஆகக்கடவது . உம்முடைய சித்தத்தின் படி நடக்கவும், உம்முடைய நேரத்தைப் பின்பற்றவும் விரும்புகிறேன். இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே இதை நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து