இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

புயலின் மத்தியில் இயேசுவானவர் தம்முடைய சீஷர்களிடம் கடலின் மேல் நடந்து வந்தபோது சொன்னது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? அவர் அவர்களிடம், "பயப்படாதே, நான் இருக்கிறேன்" என்று கூறினார். தேவனுடைய பரிசுத்தமும் அற்புதமானவருமான குமாரனின் சமூகத்திலே , நாம் பயப்பட வேண்டியதில்லை. இயேசுவுக்குள் நமக்கான தேவனுடைய கிருபையும், இயேசுவின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் பயத்தின் அவசியத்தை போக்கிவிட்டது. ஏனென்றால் இயேசுவின் தியாகம் நம்மைப் பரிசுத்தமாகவும், குற்றமற்றதாகவும், நமக்கு எதிரான எந்தக் குற்றச்சாட்டிலிருந்தும் நம்மை விடுவிக்கவும் செய்கிறது (கொலோசெயர் 1:21-22). எங்கள் பதில்? அன்பு! நம் பிதாவாகிய தேவன், அவர் யார் என்பதற்காகவும், அவர் செய்த எல்லா நன்மைக்காகவும் , நமக்காக அவர் செய்த மாபெரும் தியாகத்திற்காகவும் நாம் அவரை முழு மனதோடே நேசிக்கிறோம். நாம் நேசிக்கப்பட்டதைப் போலவே மற்றவர்களையும் நேசிக்கத் விருப்பம் கொள்கிறோம் , ஏனென்றால் பரிபூரண அன்பு எல்லா பயத்தையும் புறம்பே தள்ளும் .

என்னுடைய ஜெபம்

பரலோகத்தில் உள்ள அன்பான பிதாவே , நீர் பரிசுத்தமானவர், அற்புதமானவர், மகிமையுள்ளவர். இவையெல்லாம் உமது கிருபையின்றி என்னால் இருக்கவே முடியாது, ஆனாலும் உமது நேச குமாரனாகிய இயேசுவின் தியாகத்தின் மூலம் இந்த ஆசீர்வாதங்களை எனக்குக் கொடுக்க நீர் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன். இயேசுவின் நல்ல நாமத்தினாலே அடியேன் உம்மைப் போற்றி நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து