இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய எஜமானரின் கைவேலையை நம்மை சுற்றிக் காண்கிறோம். அவைகள் ஒரே சீராய், அழகுள்ளவைகளாய், பிரமிக்கத் தக்க வகையில் உண்டாகபட்டிருக்கிறதை காண்கிறோம் . ஆகாயவிரிவிலே கோடான கோடி நட்சத்திரங்களும், ஆச்சரியமான இவ்வுலகத்திலே எண்ணற்ற கண்களுக்கு புலன்படாத காரியங்கள் கிரமுமாய் உண்டாகப்பட்டிருக்கிறது என்பவைகளின் சாட்சியாகும். தேவனுடைய கைவேலையை இந்த உலகம் முழுவதும் பார்க்கிறோம்.அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார், இன்னுமாய் அவருடைய சிருஷ்டிப்பை அவர் கைவிடுவதில்லை என்று அறிந்திருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

தேவனே , உம்முடைய சிருஷ்டிப்புக்காக உமக்கு நன்றி. அதின் அழகு மற்றும் பல்வேறு வகைகளுக்காக நன்றி. மாறிவரும் பருவங்களுக்கும்,வசந்தத்தின் அழகுக்காகவும் நன்றி. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் உண்டுபண்ணின எல்லா ஜீவராசிகளுக்கும் , எங்களுக்கும் உம்மை வெளிப்படுத்தும்படி விரும்பினதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து