இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரலோகத்தின் தேவன் தம்மை மெய்யாய் தொழுதுக்கொள்ளுகிறவர்களை தேடுகிறார். தம்மை உண்மையாகவும், ஆவியானவரோடு இணைந்து ஆவியில் நிறைந்து துதிக்க விரும்புபவர்களை அவர் தேடுகிறார். நமது தேடலில் நமக்கு உதவவும் , இன்னுமாய் அவரை தொழுதுக்கொள்ள நமக்கு உதவி செய்வதற்காக அவருடைய பரிசுத்த ஆவியை நமக்குத் தருகிறார் (பிலிப்பியர் 3:3; யூதா 20; ரோமர் 8:26-27). எல்லாவற்றிற்கும் மேலாக, பரிசுத்த வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய சித்தத்தின்படி, நம்முடைய அனுதின வாழ்வில் ஒவ்வொரு ஆத்துமாவும் அவருக்குக் கீழ்ப்படிந்து நாம் அவரை உண்மையாக தொழுதுக்கொள்ள வேண்டும் என்று நம் பிதாவானவர் விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

அன்பான பரலோகத்தின் பிதாவே , இந்த ஜெபத்தைப் பூரணப்படுத்த இப்போதும் பரிந்துபேசுகிற நேச குமாரனுக்காகவும், உமது பரிசுத்த ஆவிக்காகவும் நன்றி. நீர் அடியேனை நன்றாய் அறிந்திருப்பது மாத்திரமல்ல , நான் உம்முடைய சமூகத்தை எப்பொழுதும் தேடி வர வேண்டும் என்று நீர் விரும்புகிறீர்கள் என்ற ஞானம் என் இருதயத்தை சிலிர்க்க செய்கிறது . நீர் அடியேனுடைய வாழ்க்கையில் செய்த எல்லா நன்மைக்காகவும், என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து "நன்றி!" என்று கூறும் மெல்லிய வார்த்தைகளை நீர் தயவாய் கேட்டு அதை ஏற்றுக்கொள்ளும் .இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து