இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில விண்ணப்பங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் விலையேறப் பெற்றவை, எனவே நாம் அவற்றை அதிகமாகப் பகுப்பாய்வு செய்யாமல் ஜெபிக்க வேண்டும். ஒருவருடைய சரீர ரீதியான கிருபைக்காக ஜெபிப்பது காலத்தைத் தாண்டிய ஒரு உண்மையான ஆசீர்வாதம். எனவே, நமக்கு விலையேறப்பெற்ற சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் மீதான இந்த ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம், நாம் என்ன ஜெபித்தோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவோம்!
என்னுடைய ஜெபம்
தேவனே , நான் மிகவும் நேசிக்கும் பின்வரும் மக்கள் மீது உமது கிருபையைப் பொழிந்தருளும். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் உமது கிருபை, இரக்கம் மற்றும் வல்லமையை அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தின் அதிகாரத்தால், அவரது கிருபை பின்வரும் மக்களில் உண்மையானதாகவும் ஜீவனுள்ளதாகவும் இருக்க நான் குறிப்பாக ஜெபிக்கிறேன்... ஆமென்.