இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருவேளை நம்முடைய மதிப்பு விலையினால் நிர்ணயிக்கப்பட்டால், நாம் நம்பமுடியாத அளவிற்கு விலையேறபெற்றவர்கள். ஏனென்றால் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்பதற்கும் , நம்மை தம்சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்வதற்கும் தேவன் பரலோகத்தின் மிக விலையுயர்ந்த பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டார்( குமாரனகிய இயேசு கிறிஸ்து ). அந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியும், பொன்னிலும் நாம் மேலானவர்கள்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் ஒவ்வொரு நாளும் உம்மிடம் என்னுடைய விலையேறபெற்ற மதிப்பை உணர்ந்து வாழ எனக்கு உதவியருளும் . என்னுடைய வார்த்தைகள், சிந்தனைகள் மற்றும் கிரியைகள் யாவும் நீர் எங்கள் மீது கொண்டுள்ள மதிப்பை பற்றிய உணர்வோடு இசைந்து இருக்கட்டும் - இவைகள் நான் மற்றவர்களுக்கு மேன்மையாக தோன்றுவதற்காக அல்ல, மாறாக நான் பரிசுத்தமாயும் , உம்முடைய விலைமதிப்பற்ற ஈவாக அடியேன் ஜீவிக்க உதவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து