இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் எகிப்தில் இஸ்ரவேலர்களின் இக்கட்டான நிலையைக் கண்டு, அவர்களின் கூக்குரலைக் கேட்டு, அவர்களுக்கு உதவி செய்ய இறங்கி வந்தது போல், இன்றும் அவர் நம்முடைய அழுகையைக் காண்கிறார் , கேட்கிறார். ஆனால் இப்போது, ​​அவர் சர்வவியாபியாக இருப்பதினால் மாத்திரம் நம் சத்தத்தை கேட்பதல்ல , குமாரனாகிய இயேசு அவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து நமக்காகப் பரிந்துபேசுவதினாலும் அவர் நம் சத்தத்தை கேட்கிறார். நாம் பூமியில் இருப்பதுப் போல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மைப் போல இருந்திருக்கிறார். அவர் மரணத்தின் வலியையும் , பாடுகளின் வேதனையையும் மற்றும் நிந்தனையையும் எதிர்க்கொண்டார். பிதாவோடு இயேசுவானவர் இருக்கிறது என்பது, நம் உதவிக்காக நாம் இடும் கூக்குரலை தேவன் கேட்பது மாத்திரமல்ல, அவரும் நம் வேதனையை உணர்கிறார். இதற்காகத்தான் இயேசுவானவர் இவ்வுலத்தில் வந்தார். தேவனானவர் உணர்கிறார், அக்கறை காட்டுகிறார், செயல்படுகிறார், இறுதியில் இரட்சிக்கிறார் என்று இயேசுவானவர் நமக்கு உறுதியளிக்கிறார். நம்முடைய கஷ்டத்தையும் துக்கத்தையும் துன்பத்தையும் தேவன் கண்டு யாவருக்கும் , இன்னுமாய் மிகவும் எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்குக் கூட உதவி செய்கிறவராய் இருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

தேவனே , பிதாவே மற்றும் இரட்சகரே,நாம் நினைத்து பார்க்கமுடியாத அதிக வலியையும், வேதனையையும் சுமப்பவர்களுடன் தயவுக்கூர்ந்து உதவிச்செய்யும் . இவற்றில் சிலவற்றை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன் அவைகளுக்காக அடியேனும் ஜெபம் செய்கிறேன். அநேக காரியங்கள் என்னால் அறியப்படாதவை, ஆனால் அவர்களுக்கு உம்முடைய ஆறுதலும், பெலனும் மற்றும் கிருபையும் அவர்களின் வேதனை மற்றும் துயர நாட்களில் உம்மில் நிலைத்திருக்க அவைகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது . உம்முடைய அரவணைப்பை குறித்ததான ஒரு தெளிவான சான்றுகளுடன் அவர்களை ஆசீர்வதியும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து