இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம் ஜெபங்களுக்கு செவி கொடுக்க விரும்புகிறார். ஆனால், நாம் நமக்காக மாத்திரமே ஜெபிப்பதில் அதிக கவனம் செலுத்துவதை விட, எப்போதும் நன்றி செலுத்துவதையே நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஜெபத்தை ஒரு விண்ணப்ப வரியாக மாற்றுவது நமக்கு மிகவும் எளிதானது. நன்றியறிதலும், துதித்தலும் நமது ஜெபத்திலிருந்து அகற்றப்படும்போது நாம் வருத்தத்திற்குள்ளாகிறோம் . நம்முடைய ஜெபங்களில் துதி குறையும் வேளைகளில் இருதயம் சோர்வடைகிறது. அதனால் நம் பிரச்சனைகளையே யோசித்து கொண்டு விண்ணப்பம் செய்வதினால் அந்த ஜெபம் வெறும் நம்முடைய தேவைகளின் பட்டியலாகவே இருக்கும் .

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள தேவனே , உம்மை துதிப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உண்டு . சோதனை மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​என் நம்பிக்கையை மறுபடியும் எழுப்ப உம்முடைய வாக்குத்தத்தங்கள் உள்ளன. ஜெய வேளைகளில் நீர் எனக்கு தந்தருளின தாலந்துக்கு உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன் . ஒரே காரியங்களை தொடர்ந்து செய்வதினால் சோர்ந்து போகும் வேளைகளில் , உம் ஆச்சரியமான வழி நடத்துதல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாகுகிறது . தேவனே நீர் மகா பெரியவராக இருந்தும் மிகவும் அன்பாய் இருப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து