இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசு அவருடைய வாழ்க்கையிலும் மரணத்திலும் இந்தக் கட்டளைக்கு சரியான உதாரணமாக இருந்தார் (லூக்கா 23:24). நம்மை மன்னிக்க வழிநடத்தும் மீட்பின் அன்பு, நம் வாழ்க்கையை மாற்றும் வல்லமையைக் கொண்டுள்ளது. எல்லோரும் அத்தகைய கிருபைக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், பலர் பதிலளிக்கிறார்கள். நம் கிரியைகளில் கிருபை காண்பிப்பதும் , நம் இருதயத்திலிருந்து எதிரிகளிடம் அன்பு காட்டுவதும் எளிதானது அல்ல என்றாலும், தேவனின் ஆவி நம்மை இயேசுவின் அன்பால் நிரப்ப முடியும், மேலும் நம்மை வெறுப்பவர்களின் முன்னிலையிலும் கூட கிருபையின் சக்திவாய்ந்த வாழ்க்கையை வாழ நமக்கு உதவும் (ரோமர் 5:5). நாம் அவ்வாறு செய்யும்போது, ஆவியானவர் நம்மை இயேசுவைப் போலவும், நமது பழைய சுய வாழ்க்கையிலிருந்து அவரை போலவும் மாற உதவுகிறார் (2 கொரிந்தியர் 3:18). கிறிஸ்தவத்தின் வரலாறு நிரூபிப்பது போல், இந்த வகையான அன்பின் அற்புதம் நம்மை எதிரிகளாகக் கருதுபவர்களை வாழ்க்கையை மாற்றி தேவனிடம் கொண்டு வரும் .
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , என் வாழ்க்கையில் ஒரு சிலருடன் எனக்குப் பிரச்சனைகள் இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவர்கள் என்னை விமர்சிக்கவும், குறைத்து மதிப்பிடவும், சிறுக செய்யவும் , தோற்கடிக்கவும், அழிக்கவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. தயவுசெய்து அவர்களின் தாக்குதல்களை எதிர்க்கும் அன்பை எனக்குக் கொடுங்கள். அவர்களின் செயல்களுக்கு மீட்பு, நீதி மற்றும் அன்பான வழிகளில் பதிலளிக்க எனக்கு அதிகாரம் அளிக்கவும். இயேசுவின் கட்டளைக்கு நான் கீழ்ப்படிந்து மற்றவர்களை என் இரட்சகரின் கிருபைக்கு வழி நடத்தி செல்லும் வகையில், என் இருதயத்தில் சாத்தியமற்றதாகத் தோன்றும் இந்த கிரியையை நடப்பியுங்கள் . இயேசுவின் மீட்பின் மற்றும் வல்லமைமிக்க நாமத்தில், பரிசுத்த ஆவியானவவரை கொண்டு உமது அன்பால் என்னை நிரப்பவும், இந்த கிருபையை மற்றவர்களுக்குக் காட்டவும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.