இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் கலாச்சாரத்தில் நாம் மேன்மையாகவும் , உயர்வாகவும் என்னும் பல விஷயங்கள் மாயை மற்றும் தற்காலிகமானவை. ஒரு செளந்தரியமான ஸ்திரீயில் நிலைத்திருப்பது அவளது வசீகரமோ அல்லது அழகோ அல்ல, மாறாக அவள் கர்த்தருக்குப் பயப்படுகிற குணமே ஆகும் . நமது கிறிஸ்துவ குடும்பங்களும்,இன்னுமாய் உலகப்பிரகரமான குடும்பங்களும், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீகளுக்கு மதிப்பையும் , அவர்களுக்குத் உரிய புகழ்ச்சியையும் கொடுப்போமாக!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , உமது குணாதிசயத்தை பிரதிபலிக்கும் அனைத்து மக்களின் குணங்களையும் நாங்கள் போற்றும் வகையில், எங்களுக்கு சிறந்த கண்களையும் அதிக உண்மையுள்ள இருதயங்களையும் தாரும் . எங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் வேளைகளிலே, அவர்கள் சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய தேவ ஞானத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி வளர்க்க எங்களை ஆசீர்வதியும். மேலும் அன்பான தேவனே, எங்கள் சபைகளில் உள்ள ஸ்திரீகளை அவர்களின் பரிசுத்த குணத்திற்காக மதிக்கவும், புகழவும் எங்களுக்கு உதவியருளும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து