இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பல சட்டவிரோத மற்றும் தீய குழுக்கள் தேவன் தங்கள் பக்கம் இருப்பதாகக் கூறுகின்றனர். "கிறிஸ்தவ" இயக்கம் என்ற போர்வையில் பயங்கரமான காரியங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மனிதர்களை அவர்களின் கனிகளால் அடையாளம் காண முடியும் என்று இயேசு சொன்னார். நன்மையைத் தேடி, தீமையை வெறுத்து, நேர்மையான குணாதிசயத்துடன் வாழ்ந்து, உண்மையுள்ள அன்பையும், நீதியையும், இரக்கத்தையும் கடைப்பிடிப்பவர்களே தேவன் அவர்களுடன் இருக்கிறார்.தேவனின் சமூகம் மற்றும் அங்கீகாரம் நம் வாழ்வில் உள்ளது என்ற நமது கூற்றுடன் நம்மில் காணக்கூடிய தேவனின் பரிசுத்த குணங்கள் பொருந்துவதை உறுதி செய்வோம்!

என்னுடைய ஜெபம்

சர்வ வல்ல தேவனே, அன்பான பிதாவே என் வாழ்வில் உம் சமூகம் இருப்பதற்கு நன்றி. பாவமும் சுயநலமும் உம்மையும் உம் குணத்தையும் என் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றி, உம் நாமத்துக்கு களங்கத்தை ஏற்படுத்திய நேரங்களுக்காக தயவுசெய்து என்னை மன்னியுங்கள். உமது நீதியான குணத்தை உலகுக்கு வெளிப்படுத்தும் போது உமது பரிசுத்த பிள்ளையாக வாழ உமது பரிசுத்த ஆவியால் எனக்கு அதிகாரம் கொடுங்கள் . இயேசுவின் நாமத்தில், உம் நீதியான குணத்தையும், கிருபையுள்ள இரக்கத்தையும், உண்மையுள்ள நீதியையும், கனிவான இரக்கத்தையும் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், ஏங்குகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து