இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த வார்த்தைகள் எருசலேமின் எதிர்காலத்தை பற்றி ஆரம்பத்தில் எரேமியாவிடம் கூறப்பட்டன. இருப்பினும், இந்த வாக்குறுதி நமக்கும் சிறப்பான வகையில் உண்மையாகும் . நாம் அவரை நோக்கி அழைக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தேவன் நமக்குத் ஆசீர்வாதமாய் கொடுக்க விரும்புவதை அருளுவதற்க்கு முன்பு, நாம் கேட்கவேண்டுமென்று அநேக வேளை காத்திருக்கிறார். தேவனைப் பற்றிய அனைத்து நம்பமுடியாத சத்தியங்களையும் நாம் புரிந்துகொண்டு பெற முடியாது. அவருடைய கிருபையிலும் மகிமையிலும் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள அவர் நமக்கு மிகவும் பெரியவர், மகிமையுள்ளவர். எனவே, நாம் என்ன செய்வது? நாம் கர்த்தரைத் தொடர்ந்து தேடுகிறோம், அவர் நம்மை அவருடைய பிரசன்னத்திற்கு நெருக்கமாக இழுக்கும்போது நமக்குத் தெரியாத விஷயங்களை வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்கிறோம். இங்கே நீங்கள் கவனியுங்கள், நாம் அவரை தேடவும், அவரைக் கண்டுபிடிக்கவும், அவரை அறியவும் செய்தார் (அப்போஸ்தலர் 17:27-28).
என்னுடைய ஜெபம்
பிதாவே, சர்வவல்லமையுள்ள தேவனே, நீர் பிரமிக்கத்தக்கவர் . நீர் என் புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டவர். ஆனாலும், அப்பா பிதாவே, நீர் எப்பொழுதும் அருகில் இருக்கிறீர் என்று நான் நம்புகிறேன், எனவே உம்முடைய மாட்சிமையிலும் வல்லமையிலும் உம்மை வணங்கும்போது என் இருதயத்தை உமக்கு ஒப்புவிக்கிறேன் , அதே போல் உமது கிருபையிலும் இரக்கத்திலும் உம்மை நான் நன்கு அறிய விரும்புகிறேன், அன்புள்ள பிதாவே, அதனால் நான் உம்மைத் தேடுகிறேன், உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், உம்மைப் புகழ்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.