இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் நித்தியமுள்ளவர். அளவற்ற வல்லமை கொண்டவர். அளவில்லாமல் பெலன் தருபவர். சோர்ந்துப்போகாமல் நம்மை ஆசீர்வதித்து தமது கிருபையை பகிர்ந்தளிக்கிறார். மிகமுக்கியமாக. அவருடைய வல்லமையையும், கிருபையையும் தினந்தோறும் நம்முடன் பகிர்ந்துக்கொள்ள ஆவலுள்ளவராய் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள நித்யபிதாவே., இரக்கத்தில் அன்பும் ஐஸ்வரியமும் உள்ளவரே, நீர் என் பெலவீனத்திலே எனக்கு கொடுத்த பெலனுக்காகவும் ,தெளிவற்ற நேரத்தில தந்த ஆலோசனைக்காகவும் , மனந்தளர்ந்த நேரத்தில் கொடுத்த நம்பிக்கைக்காகவும் ஸ்தோத்திரம். உம்முடைய சித்தத்தை பின்பற்றி பரிசுத்தாவியின் மூலமாய் நீர் என்னோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையிலே தைரியமுள்ளவனாக இருக்கும்படி என்னை ஆசீர்வதியும்.இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். .

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து