இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிருபை எவ்வளவு முக்கியம்? அந்த கிருபையை குறித்து பிரசங்கிப்பதே தன்னுடைய ஜீவனைக் காட்டிலும் அருமையானது என்று பவுல் கூறினார்! மெய்யாகவே , இயேசுவுக்குள் வந்த பிறகு அதுதான் அவருடைய வாழ்க்கை!

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , பரிசுத்த பிதாவே, என்னுடைய பாவங்களுக்காக இயேசுவை பலியாக மரிக்கும்படி அனுப்பிய உம் மாபெரிதான கிருபையை முற்றிலுமாய் விளங்க செய்ததற்காக உமக்கு நன்றி. உம் பிள்ளையாக , உம்முடைய பலியின் ஈவுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில், எனது ஜீவனையும் ,அன்பையும் ,எனக்கு உண்டான யாவற்றையும் உமக்கு என்று உறுதியளிக்கிறேன். இயேசு மூலம் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து