இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துதித்தல் என்பது தேவனின் நேரடி முகவரியாகும், இதன் மூலம் அவர் யார், அவர் என்ன செய்தார், என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதற்காக அவரை நாம் அங்கீகரிக்கிறோம் என்பதை அவர் தெரிந்துக் கொள்கிறார். ஆனால், தேவனின் மகத்துவத்தைப் பற்றி அறிவிப்பதை விட, துதி என்பது அவருடைய மகத்துவத்தில் அவருக்கு முன்பாக மகிழ்ச்சி அடைவதோடு ஒப்பிட முடியாத அவரது கிருபை மட்டுமல்ல, அவருடைய மகத்துவம், வல்லமை, பரிசுத்தம், விசுவாசம், நீதி, இரக்கம் , அன்பு, மன்னிப்பு, நியாயம் மற்றும்... ஒப்பிட முடியாதது . தேவன் என்றென்றும் நம் தேவனாயிருக்கிறார். தேவனுக்கு துதித்து நன்றி செலுத்துவோம். தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

என்னுடைய ஜெபம்

மாபெரிதான மற்றும் கிருபையுள்ள தேவனே , நீர் மெய்யாகவே என் சிறந்த வார்த்தைகள் மற்றும் சிறந்த எண்ணங்கள் மற்றும் சிறந்த கற்பனைகளுக்கு தகுதியானவர். நான் உம்மை துதிப்பது மற்றும் என்னை உமக்கு முன்பாக தாழ்த்துவது மட்டுமல்லாமல், நீர் யார் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நீர் செய்ததை எண்ணி நான் போற்றுகிறேன் , நீர் இன்னும் என்ன செய்ய போகிறீர் என்று நான் ஏங்குகிறேன். நீர் அற்புதமானவர், என் பிதா மற்றும் என் தேவன் . இயேசுவின் மூலமாகவும், அவருடைய ஒப்பற்ற அன்பின் காரணமாகவும், நான் உன்னைப் போற்றுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து