இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர், புதுப்பிக்கிற மற்றும் ஆசீர்வதிக்கிற தேவனாயிருக்கிறார். புதுப்பிக்கவும், ஆசீர்வதிக்கவுமே அவர் ஆசையுள்ளவராயிருக்கிறார், அந்த ஆசையானது ஒருவிசை மாத்திரம் நம்முடைய இரட்சிப்பினால் நம்மை ஆசீர்வதியாமல் ஒவ்வொருநாளும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். காலைதோறும் புதிய நிலையான அன்பின் ஆசீர்வாதங்களை உண்மையாய் பொழிகிறார். (புலம்பல் 3:23). நமக்கு வேண்டிய காரியங்கள் மாத்திரமல்ல நினைக்கிறதற்கு மேலாய் நற்காரியங்களை தந்து திருப்தியாக்குகிறார். நம் தேவைகள் எவைகளோ, நம்முடைய வெறுமையை எவைகள் உண்மையாய் நிரப்புகிறதோ அவைகளையும் தருகிறவராயிருக்கிறார்

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே, சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய வல்லமை, மகத்துவம், மகிமை, உண்மை , இரக்கம், ஞானம், கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். தேவரீர் நீர் கொடுத்த இரட்சிப்புக்காக, பரிசுத்த ஆவியானவருக்காக, கிறிஸ்துவ குடும்பங்களுக்காக, உம்முடைய வீட்டிலே வாழும்படியாய் அளித்த வாக்குத்தத்தத்திற்காக, நீர் தினந்தோறும் உறுதியளிக்கிற உம்முடைய புதுப்பிக்கிற பிரசன்னத்தின் ஆசிர்வாதங்களுக்காவும் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து