இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இதோ ஒரு பெரிய செய்தி: விசுவாசம் மற்றும் ஞானஸ்நானம் மூலம் நாம் கிறிஸ்துவுனே கூட மரித்தோமானால் , மெய்யாகவே நம் வாழ்க்கையில் தேவையான ஒரு மரணத்திற்க்கு நாம் ஏற்கனவே மரித்துவிட்டோம். நம் வாழ்வு இயேசுவின் வாழ்வோடு இணைந்திருக்கிறது, எனவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும்போது அவருடைய மகிமையில் நாம் பங்கு பெறுவோம் என்று நாம் உறுதியாக இருக்கலாம் (கொலோசெயர் 3:1-4). நம் வாழ்வில் இயேசுவின் பிரசன்னத்திலிருந்து மரணம் கூட நம்மைப் பிரிக்க முடியாது (ரோமர் 8:35-39) ஏனென்றால், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக மரணத்தின் மீதான வெற்றி நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (1 கொரிந்தியர் 15:55-57). எதிர்கால நியாயத்தீர்ப்பு அல்லது இரண்டாவது மரணம் குறித்து நாம் பயப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் நாம் ஏற்கனவே மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்துவிட்டோம் (யோவான் 5:24). பவுலானவர் மிகவும் நம்பிக்கையுடன் கூறுவது போல், "நாமும் நிச்சயமாக [இயேசுவுடன்] அவருடைய உயிர்த்தெழுதலில் ஒன்றுபடுவோம்"!

என்னுடைய ஜெபம்

பவுலானவர் செய்த ஜெபத்தை மீண்டும் நாம் செய்யக்கூடிய ஒரு ஜெபமாயிருப்பதாக : "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார் ? தேவனுக்கு நன்றி - நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்!" வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அற்புதமான இந்த ஈவுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள் அல்லது எங்கள் மரண வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது! ஆமென், அல்லேலூயா! (ரோமர் 7:24-25)

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து