இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு கிறிஸ்தவத் தலைவருக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய கனத்தில் மற்றும் பொறுப்புகளில் ஒன்று, தேவனுடைய குடும்பத்திலே அல்லது சபையிலே ஒரு ஊழியராக அல்லது மேய்ப்பராக நியமிக்கப்பட வேண்டும் என்பதே . தேவனுடைய மந்தையின் மேய்ப்பர்களாக அங்கீகரிக்கப்படுவதற்கு பரிசுத்த வேதாகமத்தின் படி ஒரு சிலர் மட்டுமே தகுதி பெற்றிருந்தாலும் (அப்போஸ்தலர் 20:17-28; 1தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9 பார்க்கவும்), மற்றவர்களை மேய்க்கும் அல்லது வழிநடத்தும் அக்கறை நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானது அதினால் , ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கவும் உற்சாகப்படுத்தவும் முடியும் (எபேசியர் 4:29; எபிரெயர் 10:24). நம்முடைய ஆவிக்குரிய தலைவர்களாக நாம் தேர்ந்தெடுத்தவர்கள், இயேசுவின் இரத்தத்தால் கிரயமாய் கொள்ளப்பட்ட மந்தையை உண்மையோடும் , கைகளின் திறமையோடும் எவ்வாறு மேய்ப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சொல்லுவோம் (அப்போஸ்தலர் 20:28). அவர்கள் வழிநடத்தும்போது, ​​நமது முயற்சிகளின் மூலமாய் , ஜெபங்களின் வழியாய் மற்றும் ஊழியத்திலே அவர்களுக்கு முழு ஒத்துழைப்பின் மூலமாயும் அவர்களுக்கு ஆதரவளிப்போம் (எபிரெயர் 13:7, 17, 24). நமது ஆவிக்குரிய மேய்ப்பர்கள் "இருதயத்தின் உண்மையின்படியே " " கைகளின் திறமையினால்" நம்மை வழிநடத்த வேண்டும் என்று எப்பொழுதும் ஜெபிப்போமாக .

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள மேய்ப்பரே, உம்முடைய ஆடுகளை உண்மையுடனும், தெய்வீகத் திறமையுடனும் மேய்க்கும் பெரிய வருங்கால தலைவர்களை உம்முடைய திருச்சபையிலே எழுப்ப வேண்டும் என்று என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து விண்ணப்பிகிறேன் . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து