இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் பாவத்தை எப்படி அருவருத்து வெறுக்கிறாரோ அப்படியே நாமும் பார்க்க பழகினோமென்றால் அப்பொழுது நாம் நம் பாவத்தை அறிக்கையிடுகிறோம் என்று அர்த்தமாகும் . இப்படிப்பட்டதான அறிக்கையே பரலோகத்தின் கிருபையின் வெள்ளத்திற்கு நம் இருதயத்தை திறக்கிறதாயிருக்கிறது ( சங்கீதம் 51). இயேசுவானவர் சிலுவையின் மரணத்தின் மூலமாய் சம்பாதித்த இனிதான விடுதலையை நம்முடன் தேவன் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். இதன் மூலம் நம்முடைய பாவத்திலிருந்து மாத்திரம் நாம் மன்னிக்கப்பெறாமல், பரிசுத்தமாக்கப்பட்டுமிருக்கிறோம். நாம் இனி பாவிகள் அல்ல, அந்த பாவத்தின் கறைகள் நீக்கப்பட்டிருக்கிறது. கறைதிரை எல்லாம் நீக்கி நம்மைச் சுத்திகரித்து பரிபூரணப்படுத்தி இருக்கிறார் -இது தேவனுடைய சுத்த கிருபை. (கொலோசேயர் 1:21,22). ஆதலால் நம்முடைய ஜீவியத்தில் இணையில்லா இந்த கிருபையை நமது வாழ்வில் பிரதிபலிப்போமாக.

என்னுடைய ஜெபம்

பிதாவே, என்னுடைய பாவங்களை உம்மண்டையில் அறிக்கையிடுகிறேன்! தயவாக என்னை மன்னியும் (தயவுகூர்ந்து உங்கள் பாவத்தை ஒளிவுமறைவின்ற தெரிவிக்கவும் ) என்னுடைய அங்கலாய்ப்பையும், துக்கத்தையும் உண்மையாய் மற்றவர்களிடத்தில் பகிர்ந்திட செய்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம்.தேவனே தயவாக என்னை அவர்களுடைய வல்லமையுள்ள செயல்களிருந்து விடுவித்து என்னில் திடமளித்திடும். நீர் அவர்களை மன்னித்தது மாத்திரமல்ல, என்னையும் சுத்திகரித்து பரிசுத்தமாக்கினீர். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து