இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் என்னை மன்னிப்பதற்காக கொடுத்த விலையை நான் அறிவேன் , இன்னுமாய் மற்ற சகோதரனுக்காகவும், சகோதரிக்காகவும் கிறிஸ்து மரித்திருக்க நான் அவர்களை எப்படி மன்னிக்காமல் இருக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , உம்முடைய பிள்ளைகளில் ஒருவருக்கு எதிராக எனக்கு இருக்கும் எந்த வெறுப்பையும் கசப்பையும் விட்டு விடுவேன் என்று இன்று நான் உறுதியளிக்கிறேன். நீர் அடியேன் மீது காண்பித்த உம் கிருபையையும், இரக்கத்தையும் நான் அவைகளிடம் பிரதிபலிக்காததற்காக வருந்துகிறேன். அப்பா பிதாவே , எனக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறுகள் மீதான எனது கோரிக்கையை கைவிடவும், என்னை காயப்படுத்தியவர்களை உம்முடைய குடும்பமாகிய சபையில் அவர்களை முழு உடன்பிறப்புகளாக நடத்தவும் உமது பரிசுத்த ஆவியின் உதவியை எனக்கு தாரும் . கடினமாக இருந்தாலும், மன்னிப்பதில் உம்முடைய மாதிரியைப் பின்பற்றுவேன் என்று நான் உறுதியளிக்கும் வேளையில் எனக்கு பெலனை அளித்தருளும் . இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து

Important Announcement! Soon posting comments below will be done using Disqus (not facebook). — Learn More About This Change