இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சாலமோன் தேவனுக்கு ஆலயத்தை உருவாக்கிய போது , ​​இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரை கனப்படுத்தவும், இந்த ஆலயத்தில் வைக்கவும் நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?என்று உணர்ந்தார். இருப்பினும், தேவன் மனிதர்களுடன் வாழத் தேர்ந்தெடுத்தார், மேலும் தேவன் தமது பிரசன்னத்தை வெளிப்படுத்திய ஒரு சிறப்பு இடமாக ஆலயம் இருக்கும். தம்முடைய மக்களிடையே தேவனின் வாசஸ்தலமானது தனிப்பட்ட முறையில் இயேசு இவ் உலகத்தில் வந்ததின் மூலம் வந்தது (யோவான் 1:11-18). தேவன் அற்புதமானவர் மற்றும் விவரிப்புக்கு அப்பாற்பட்டவர், குறைபாடுள்ள மனிதர்களுடன் தொடர்புகொள்வார் அல்லது ஒரு பெரிய கட்டிடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் பரிசுத்தமானவர். இருப்பினும் ஆண்டவராக , கர்த்தர் இயேசுவில் நம்மில் ஒருவராக நம்முடன் நேசிக்கவும் வாழவும் தேர்ந்தெடுத்துள்ளார். நாம் அவரிடம் திரும்பவும் அவருடைய மகிமையில் பங்குகொள்ளவும் தேவன் இதைச் செய்தார். இருந்தபோதிலும், சாலமோன் ஆலயத்தைக் கட்டுவது ஒரு சிறந்த சாதனையாக இருந்தது, மேலும் தேவனுக்குப் பெரிய கனத்தைக் கொடுத்தது!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , தேவத்துவத்தின் பிதாவே, என் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை விட நீர் மிகவும் அற்புதமானவர், என் இருதயம் முழுவதுமாக புரிந்துகொள்வதை விட அதிக கிருபையுள்ளவர். மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட உம் மகிமைக்கும், எங்களிடையே உள்ள மிகப்பெரிய தூரத்தை இணைக்கும் உம் கிருபைக்கும் நன்றி. அன்புள்ள பிதாவே , நீர் என் தேவனாக இருப்பதற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் நான் உம்மைப் போற்றுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து