இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு தந்தைக்கு அல்லது தாய்க்கு இதைவிடச் சிறந்த குறிக்கோள் என்னவாக இருக்க முடியும்? உங்களுக்குச் சொந்தப் பிள்ளைகள் இல்லாவிட்டாலும், அல்லது உங்கள் "சொந்த" பிள்ளைகள் பெரியவர்களாய் வளர்ந்துவிட்டாலும் , தேவனானவர் அவருடைய பிள்ளைகளை உங்கள் திருச்சபையிலே உங்களுக்குத் தருகிறார், அதனால் அவர்களுடைய ஒரே பரலோகத்தின் பிதாவை நேசிக்கவும், கனம்பண்ணவும் , பயபக்தியடையவும் அவர்களுக்குக் கற்பிக்க முடியும். சகல ஜாதிகளையும் சீஷர்களாக ஏற்படுத்தும்படி இயேசு நம்மை அழைக்கிறார் (மத்தேயு 28:18-20; 2 தீமோத்தேயு 2:1-2). அதாவது நாம் நேசிக்கிறவர்களின் இருதயத்தில் இயேசுவானவர் உருவானதைக் காண்பதே நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும் என்பதை நாம் அறிவோம் (லூக்கா 6:40; கலாத்தியர் 4:9; கொலோசெயர் 1:28-29).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , சபையில் உள்ள உம்முடைய பிள்ளைகளுக்கு கற்பிப்பதில் ஈடுபட எனக்கு உதவியருளும் , நான் கற்பிக்கும்போது, ​​ஒரே மெய்யான மற்றும் பரிசுத்தமான தேவனாகிய உம்மை நேசிக்கவும், கனம்பண்ணவும் , பயபக்தியடையும்படி கற்பிக்கும் எனது முயற்சிகளை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே , இந்த உதவியையும் கிருபையையும் நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து