இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கழுகுகளின் சிறகுகளில் நாம் பறக்கும்போது தேவனுக்கு வெற்றியாக வாழ்வது எளிது. கர்த்தருடைய வல்லமையினாலும் பிரசன்னத்தினாலும் பெலன்கொண்டு , கர்த்தருடைய வேலையில் நாம் சோர்ந்து போகாமல் ஓட அது உற்சாகமாக இருக்கும். ஆனால், சோதனைகள் வரும்போது பெலனற்று போகாமல் தொடர்ந்து நடக்க ஜெய வீரர்கள் தேவைப்படுகிறார்கள். சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருங்கள். நீங்கள் மிகவும் திகைத்து நிற்கும் வேளைகளில் தேவன் இருக்கிறார், அவர் உங்களை மறப்பதில்லை !

என்னுடைய ஜெபம்

வல்லமையும் பராக்கிரமமும் உள்ள தேவனே, யாருடைய தொனி இவ் பிரபஞ்சத்தை ஒன்றாக வைத்திருக்கிறதோ , அவர்கள் மன அழுத்தத்தையும், சாத்தானின் தாக்குதலையும் எதிர்கொள்வதினால் தொய்ந்து நடக்கும் போது , ​​தொடர்ந்து நடப்பதற்கான போதுமான பெலத்தின் சத்துவத்தை தாரும் . தனிப்பட்ட முறையில் எனக்கு அறிமுகமானவர்களுக்கும் கடினமான காலங்களை எதிர் கொள்ளுபவர்களுக்காகவும் நான் விஷேசமாக ஜெபிக்க விரும்புகிறேன். தயவு செய்து, அன்பான ஆண்டவரே, அவர்களுக்குப் பலத்தைத் தந்து, அவர்களின் மிக முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். சாத்தானையும், பாவத்தையும் மரணத்தையும் வெற்றி சிறந்த இயேசுவின் மூலமாக, அவருடைய பரிசுத்த நாமத்தின் வல்லமையினால் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து