இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது நவீன உலகின் பெரிய நகரங்களைப் பற்றி நீங்கள் நினைக்கும் போது, ​​நீங்கள் எதைப் குறித்து சிந்திக்கிறீர்கள் ? குற்றம் , போக்குவரத்து, அதிக விலை, பெரிய கூட்டம், அழுக்கு மற்றும் அதிக சத்தம் ஆகியவற்றை குறித்தா சிந்திக்கிறீர்கள் ? இயேசு அவர்களைப் பார்க்கிறார், அந்த பெரிய நகரங்களில் இழந்துப்போன மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று ஏங்குகிறார்! இயேசுவின் முக்கியத்துவத்தை நாம் தவறவிட்டால், எருசலேம், சிரியாவின் அந்தியோக்கியா, எபேசு மற்றும் ரோம பட்டணங்கள் ஆகியவற்றிலிருந்து இயேசுவைப் பற்றிய அந்த நற்செய்தி எவ்வாறு பரம்பி விரிந்தது என்பதைக் காண்பிக்க லூக்கா ஆசிரியர் அப்போஸ்தல நடபடிகள் புத்தகத்தை எழுதினார். நமது முக்கிய நகரங்களில் குற்றங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்த கொடூரமான செய்திகளை நாம் கேட்கும்போது, ​​அங்கு வசிப்பவர்களுக்காக நாம் ஊக்கமாக ஜெபிப்போம். நாம் பெரிய நகரங்களில் வசிக்கிறோம் என்றால், காவலர்கள் , ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அல்லது பிற அவசர வாகனங்களில் இருந்து அவசர ஒலியை நாம் கேட்கும்போது, ​​​​நம் நகரத்தில் உள்ள மக்களின் இரட்சிப்புக்காக ஒரு நிமிடம் ஜெபிப்போம்!

என்னுடைய ஜெபம்

மிகவும் பரிசுத்தமும் மற்றும் அன்பும் நிறைந்த தேவனே , உமது திருச்சபையில், உம்முடைய நேச குமாரனின் நற்செய்தி மற்றும் கிருபையினால் , உலகின் பெரிய நகரங்களில் உம்மை அறியாத மக்களைச் சென்றடைவதற்கான ஆர்வத்தை எங்களிடம் புதுப்பித்தருளும் . ஒரே மெய்யான கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து