இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் வாழ்கிற இந்த பரபரப்பான உலகத்தில், நாம் அடிக்கடி கவலைக்குரிய மற்றும் பொருத்தமற்ற விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம். இப்படி கவலைப்படுவதினால் நமக்கு என்ன பலன் உண்டாகிறது ? நம் வாழ்க்கையை மேலும் பலன் உள்ளதாய் மாற்றவோ அல்லது நீண்ட ஆயுளைக் கூட்டவோ அல்லாமல், கவலை நமக்கு அழிவை மாத்திரமே விரைவுப்படுத்துகிறது, மகிழ்ச்சியின் நாட்களைப் பறிக்கிறது, நம் சரீரத்துக்கு தீங்கு விளைவிக்கிறது, மேலும் கிருபையை நோக்கி பார்க்கும் பார்வையை இழக்க வழிவகுக்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே, கவலை மிகவும் அழிவுகளை உண்டாக்கும் என்றால், நம்மால் மாற்ற முடியாததைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக ஏன் பரலோகத்தின் தேவனிடம் நம் வழிகளை ஒப்புவித்து , அவருடைய வழிகாட்டுதலை நாடக்கூடாது?

என்னுடைய ஜெபம்

பூமியை அதன் சுற்றுப்பாதையில் வைத்திருக்கச் செய்ததற்காகவும் , என் இருதயத்தை துடிக்க செய்ததற்காகவும் பிதாவே உமக்கு கோடான கோடி நன்றி. எனது மரணம் மற்றும் எனது சரீர வரம்புகளுக்கு அப்பாற்பட்ட எதிர்காலத்தை எனக்கு வழங்கியதற்காக நன்றி. எனது அனுதின வாழ்வில் உமது கிருபையையும், இன்னுமாய் எண்ணற்ற ஆசீர்வாதங்களையும் பொழிந்ததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, நீர் கொடுத்த ஆசீர்வாதங்களை நான் எண்ணாமல் , இன்னும் அதிகமான காரியங்களை எப்படி சேர்ப்பேன் என்று கவலைப்பட்டு பயப்படுவதினால், மேலும் நான் ஏற்கனவே பெற்று சேகரித்த ஆசீர்வாதமான காரியங்களை இழக்க நேரிடும், இப்படி கவலைப்படுவதற்காக அடியேனை மன்னியும் . நிகழ்காலத்தில் நிலைத்திருக்க வேண்டிய ஞானத்திற்காகவும் நான் ஜெபிக்கிறேன், அடியேன் பெற்ற எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துகிறேன், இயேசுவுடன் என் எதிர்காலத்திற்காக மகிழ்ச்சியடைகிறேன், அவருடைய அதிகாரத்தால் நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து