இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீதியானது மிகப் பெரிதான ஆசீர்வாதங்களை நமக்கு கொண்டுவருகிறது . கொடுமையானது அதின் சொந்த மோசமான வெகுமதியாய் இருக்கும் , யார் இவைகளை மற்றவர்களுக்கு செய்தார்களோ, அதை உபயோகித்தவர்களுக்கே அவைகள் வருகிறதாய் இருக்கிறது. நம்முடைய தேர்வு என்ன ? ஆசீர்வாதமா? அல்லது கொடுமையா ? உற்சாகமான வார்த்தையா? அல்லது கொடுமையான வார்த்தையா ? எனவே உங்கள் உண்மையான தேர்வு என்ன ? நம் குணாதிசயங்களை தேவன் தாமே வரையறுக்க அனுமதிப்போமாக மற்றவர்கள் அல்ல.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, நான் உமக்கு பிரியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன், எப்படியெனில் நீதியுள்ள குணாதிசயம் மற்றும் கிருபை நிறைந்த மனதுருக்கமான வாழ்க்கையே . உம்முடைய இராஜ்ஜியத்தையும் கிருபையையும் மற்றவருக்கு கொண்டுவர விரும்புகிறேன். கொடுமையானது அவர்களுக்கும் , மற்றவருக்கும், இன்னுமாய் சிறு பிள்ளைகளுக்கும் அழிவைக் கொண்டு வருகிறதாய் இருக்கிறது என்று மற்றவர்கள் அறிந்துக் கொள்ள, நான் உதவ விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து