இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு நோக்கத்தையும், திட்டத்தையும் வைத்திருக்கிறார். அந்த நோக்கத்தைக் கண்டறிந்து அதன்படி வாழ்வதே நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய காரியமாகும் . நமக்கான அவருடைய நோக்கத்தை நாம் மெய்யென்று நம்பலாம், ஏனென்றால் அது அவருடைய ஞானத்தையும், அன்பையும் அடிப்படையாகக் கொண்டது. ஆம், தேவன் நமக்கு வைத்திருக்கிறதான பாதையை விட்டு விலகி செல்கிறதான வேளைகள் உண்டு ஆயினும் நாம் முற்றிலுமாய் அந்த மெய்யான பாதையை விட்டு விலகுவதில்லை. நாம் அவரை முற்றிலுமாய் விலகாமல் இருப்போமானால் , அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், அவர் நம்மை அவருடைய சித்தத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு நல்ல பாண்டமாய் எடுத்து பயன்படுத்துவார்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உமது திட்டத்திலே என் வாழ்க்கையின் பங்களிப்பை நிறைவேற்ற வேண்டியதை இன்றே அறிய எனக்கு உதவுங்கள். என்னை நேசித்ததற்காகவும் , என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் என்னோடு கூட இருப்பீர் என்று வாக்களித்ததற்காகவும் உமக்கு நன்றி. நீர் அடியேனை ஒருபோதும் கைவிடமாட்டீர் என்றும், அதுபோல அடியேனும் உம்மை விட்டு விலகமாட்டேன் என்ற நம்பிக்கையோடே வாழ்கிறேன். உம்முடைய சத்தியபரராகிய நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து