இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒவ்வொரு தேசத்திலிருந்தும் தேவனுடைய ஜனங்கள் யாவரும் மனந்திரும்பி தங்களைத் தாழ்த்தி, தங்கள் தேசங்களுக்கு அவருடைய பரிசுத்தத்தை வெளிப்படுத்தும்படி தேவனிடம் கேட்போமானால் என்ன சம்பவிக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? என்னால் எதுவும் செய்யமுடியாது ஆனால் சாலொமோன் மூலமாய் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்த இந்த வாக்குறுதியை என்னால் நினைவுகூர முடியும் . என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். (2 நாளாகமம்-2 Chronicles 7:14).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும், பரிசுத்தமுமுள்ள தேவனே, என்னுடைய நண்பர்களுக்கு முன்பாக என் பாவத்தினால் உம்முடைய நற்சாட்சியை களங்கப்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன், மனந்திரும்புகிறேன். என் மக்களின் பாவங்களுக்காகவும், உமது பரிசுத்த வழியிலிருந்து நாங்கள் எங்களின் வாழ்க்கைக்காகத் திரும்பியதற்காகவும் வருந்துகிறேன். தயவு செய்து எங்களை மன்னித்து, நாங்கள் வாழும் நாட்களில் , உமது மகத்துவத்தினாலும், பரிசுத்தத்தை கொண்டு வல்லமையுடனே வெளிப்படுத்துங்கள் .நம்முடைய பாவங்கள் அனைத்திற்காகவும் பலியாக மரித்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து