இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா, என்ன ஒரு குற்றச்சாட்டு. இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் உள்ள அநாகரிகங்கள், துரோகங்கள், சட்ட விரோதங்கள் போன்றவற்றை மன்னிக்கும்போதும், குணாதிசயங்களை விட நமது பையில் உள்ள பணத்துக்காக வாக்களிக்கும் போதும் , ​​நாம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளோம்! ஆனால், நமது பொது அதிகாரிகளின் ஒழுக்கத்தின் மோசமான நிலையைப் பற்றி நாம் இழிவானவைகளை பேசுவதற்கு முன், நம்முடைய சொந்த அனுதின வாழ்க்கையில் நாம் நேர்மையாக இருப்பதை உறுதி செய்வோம் - நாம் மற்றவர்களைப் பற்றி தகாத விஷயங்களைச் குறித்து பேச மாட்டோம் என்றும் , நமது திருமணங்களுக்கும் நமது பரிசுத்த உடன்படிக்கையில் உள்ள உறுதிமொழிகளுக்கும் உண்மையாக இருக்கிறோமென்றும் , மற்றவர்களை காட்டிலும் நம்மண்டை மேன்மையான தரத்தை எதிர்பார்ப்பதையும் உறுதி செய்வோம்.

என்னுடைய ஜெபம்

தேவனே , நீர் சர்வவல்லமையுள்ளவர் மாத்திரமல்ல , நீர் பரிசுத்தமானவர்! பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் நீரே. பூமி முழுவதும் உமது மகிமையால் நிரப்பப்படட்டும், அந்த மகிமை நான் செய்வதிலும் சொல்வதிலும் காட்டப்படட்டும். என் சொந்த பாவத்தையும் பாசாங்குத்தனத்தையும் மன்னியுங்கள். உமது மகிமைக்காக என் வாழ்க்கையை நான் அர்ப்பணிக்கும்போது மாசற்ற தன்மையுடனும் , நீதியுடனும், பரிசுத்தத்துடன் இருக்க என்னை ஆசீர்வதித்தருளும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து