இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

புதிய விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் தங்களுடைய உண்மையான விடுதலையை காத்துக்கொள்ள உதவுவதற்காக பவுலானவர் எழுதுதியிருக்கிறார் : நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்கள் நீதியைப் பெற முயற்சிப்பதில் இருந்து விடுதலை (கலாத்தியர் 3 & 4 ஆம் அதிகாரம் ). நியாயப்பிரமாணத்தால் தேவனுக்கு முன்பாக அவர்களை நியாப்படுத்த முடியவில்லை. இயேசுவை பற்றும் விசுவாசத்தினால் மாத்திரமே அவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது, கிறிஸ்துவுவின் கிருபையினாலே நாம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுகிறோம் (கலாத்தியர் 2:14-16, 2 கொரி 3:17-18).அவர்கள் விசுவாசத்தின் மூலம் தேவனின் பிள்ளைகளாக இருந்தார்கள், இயேசு கிறிஸ்துவின் பண்புகளைப் பெற ஆவியால் வழிநடத்தப்பட்டனர் (கலாத்தியர் 5:16-26). நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருப்பதாலும் , இயேசுவை விசுவாசிப்பதாலும், விசுவாசத்தின் மூலம் ஞானஸ்நானத்தில் அவருடன் நாம் பங்கு கொள்வதாலும், நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிப்பதிலிருந்தும், பாவத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறோம் என்பதை நாமும் உணர வேண்டும்(கலா 3:26-29 , ரோமர் 6:3-14; 1கொரி15:3-7). எந்தவொரு நியாயப்பிரமாண சட்டத்தின் கிரியைகளினாலும் , விதிகளினாலும் அல்லது ஒருவருடைய மத எதிர்பார்ப்பினாலும் நாம் ஒருபோதும் நம்மை நியாயப்படுத்திக் கொள்ளக்கூடாது. அப்படி செய்வோமானால் நம்முடைய விடுதலையை தள்ளி மறுபடியுமாய் அடிமைத்தனத்திற்குள்ளாய் பிரவேசிப்பதாகும். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளையல்ல, கிறிஸ்துவானவர் நமக்காக என்ன செய்தாரோ அதையே நம்பிக்கொண்டு இருக்கும்படி பவுலானவர் தயவாய் நம்மிடம் கேட்டுக்கொள்கிறார். கிறிஸ்துவின் சிலுவையும் காலியான கல்லறையும் தான் நம்மை பாவம், மரணம் மற்றும் எதுவும் விடுவிக்க முடியாத அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது. .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள தேவனே, அப்பா பிதாவே, பாவத்தின் கொடுமையிலிருந்தும், குற்றஉணர்விலிருந்தும் அடியேனை விடுவித்தமைக்காக உமக்கு நன்றி ! நியாயப்பிரமாண சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் என் இரட்சிப்பைப் பெற முயற்சிப்பதில் இருந்து என்னை விடுவித்ததற்கு நன்றி. உம்முடைய ஆவியினால் என்னை அதிகாரமுள்ளவனாயும், மறுரூபமடையும்படியும் செய்குவீர் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறேன். உமது ஆவியின் வல்லமையினால் அடியேனுடைய பாவமான கடந்த காலத்தை விட்டுவிட முடியும் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.என் குடும்பத்திலும், என் வேலையிலும், உங்கள் உலகிலும் பண்பான மற்றும் ஆசீர்வாதமான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உங்கள் கிருபையை மேன்மை படுத்த விரும்புகிறேன்.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து