இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை, தேவனுடைய ஆலயம் இரண்டு காரியங்களுடன் தொடர்புடையது, ஒன்று : கிறிஸ்தவர்களின் சரீரம் (1 கொரி. 6:19-20) அல்லது அவருடைய சபையை உருவாக்கும் அங்கத்தினர் (1 கொரி. 3:16). நமது சபை அங்கத்தினரில் உள்ள குறைபாடுகள் காரணமாக, பலர் தங்கள் மாயாஜாலத்தை மிகைப்படுத்துகிறார்கள். ஆனால் தேவனின் திருச்சபை அவருக்கு விலையேறப் பெற்றது , அது நமக்கும் அப்படியே விலையேறப்பெற்றது . பிரிவினையின் மூலம் அவருடைய திருச்சபையை அழிக்க நினைக்கும் எவரும் முற்றிலும் அழிக்கப்படுவார்கள். வரலாற்றின் அனைத்து அழிவிலும், துன்பங்களிலும் இன்னுமாய் அவருடைய தேவாலயத்தில் அல்லது சபைகளிலுள்ள குறைபாடுள்ள ஜனங்களுடன் அவர் பொறுமையாக இருந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதில் தேவனுடைய மெய்யான விசுவாசம் காணப்படுகிறது. ஆனால், தேவன் இன்னும் திருச்சபையின் ஆதாரமாக இருக்கிறார், ஆகையால் அவர் மாத்திரமே மேன்மை படுத்தபட வேண்டும். திருச்சபை இன்னும் அவருடைய வார்த்தையால் கண்காணிக்கபட வேண்டும், நம்முடைய சொந்த விருப்பத்தால் அல்ல.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள, ஒப்பற்ற தேவனே , வரலாற்றின் அனைத்து காலங்களிலும் உமது தேவாலயத்தைப் பாதுகாப்பதில் வெளிப்படுத்தப்பட்ட உம் மாறாத அன்பும், உண்மையுள்ளவருமாய் இருப்பதற்காக நான் உம்மைப் துதிக்கிறேன். உமது சபையை நான் மிகவும் நேசிக்கிறேன் , இவைகளினால் மேலும் நான் இயேசுவைப் போல வளரவும் முதிர்ச்சியடையவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நீர் மாத்திரமே மற்ற எல்லா காரியங்களுக்கு மேலாக மகிமைப்பட வேண்டும் என்பதையும், உம் வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட உமது சித்தத்தை விட தேவாலயம் ஒருபோதும் முக்கியமானதாக இருக்கக்கூடாது என்பதையும் நான் அங்கீகரிக்கிறேன். நான் கூடி வரும் சபையானது உம்மை முழுமையாக கனப்படுத்தாவிட்டாலும், உமக்கு எப்பொழுதும் எவ்வேளையிலும் உண்மையாக இருக்க எனக்கு தைரியத்தை தாரும். இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து