இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய ஞானத்தின்படி காரியத்தை நடப்பிக்கிறவர்களும் , தங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதங்களுக்காகவும், மதிப்புகளுக்காகவும் தேவனை நம்புகிறவர்களும் மகிழ்ச்சியான செழிப்பைக் காண்பார்கள். இந்த கூற்று வர்த்தக உலகில் சிறப்பாக இயங்கவில்லை என்றாலும், இந்த புரிதல் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வளமான வாழ்க்கைக்கு முக்கியமாகும்!

என்னுடைய ஜெபம்

ஞானமும், நித்யானந்தமும் நிறைந்த தேவனே , உம்முடைய ஞானத்திற்கு என் உள்ளத்தையும் , உமது கிருபையான பிரசன்னத்திற்கு என் இருதயத்தையும் திறந்தருளும். எனது எதிர்காலம் உம்முடன் என்று நம்புகிறேன். இயேவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து