இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஏசாவை போல, நாமும் வயிற்று பிழைப்புக்காகவும், இம்மைக்குரிய கவலைகளுக்காகவும் சிக்குண்டு சிதறடிக்கப் படுகிறோம், நாம் அழியாத காரியங்களை குறித்ததான தொலைநோக்கு பார்வையை மறந்துவிடுகிறோம். தேவனுடைய வார்த்தையும், அவருடைய எழுதப்பட்ட வார்த்தையான வேதாகமமும் , இயேசுவின் மூலமாய் அவர் வெளிப்படுத்திய வார்த்தையும், சுவிசேஷத்தின் மூலமாய் அவர் அறிவித்த வார்த்தையும் நம்மை நித்தியமாக நிலைநிறுத்தக்கூடியவை. இதுவே நாம் தேடும் ஜீவ அப்பம்.

என்னுடைய ஜெபம்

சத்தியமும் உண்மையுமுள்ள தேவனே , உமது பரிசுத்த ஆவியின் மூலமாய் உமது வார்த்தைக்கான ஆவலை என்னுள் உருவாக்குங்கள், அது என் மாம்சத்திற்குரிய பசியை விட மிகவும் அவசியமானது. சில சமயங்களில் நான் வாழ்க்கையின் இம்மைக்குரிய விஷயங்களால் திசைதிருப்பப்பட்டேன், உம்முடைய பரிசுத்த வார்த்தையை நாடாமலும் , என்னால் இயன்றவரை என் ஆத்துமாவை முழுமையாக போஷிக்கவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். உமது வார்த்தையின் மூலமாயும் உமது பரிசுத்த ஆவியின் மூலமாயும் உம் வழிநடத்துதலுக்கும் உம் சத்தியத்திற்கும் அதிக கவனம் செலுத்துவதற்காக நான் என்னை மீண்டும் ஒப்புக்கொடுக்கும்போது தயவுகூர்ந்து என்னை மன்னித்து வழிநடத்துங்கள் . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து