இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக."(யாத்திராகமம் 20:12) என்பது தேவனுடைய பத்துக் கட்டளைகளில் ஒன்றாகும். இதுவே நம் வாழ்வுக்கான தேவனுடைய திட்டத்திற்கு அடிப்படையாகும் . தேவனுடைய கிருபையின் உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு குடும்பங்கள் கட்டப்பட வேண்டும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கனம் பண்ணவும், கீழ்ப்படியவும் கற்றுக்கொள்வது குடும்பத்திற்கும் , சமூகத்திற்கும் மற்றும் கலாச்சாரத்திற்கும் அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. பெற்றோர்கள் சிறுப்பிராயம் முதல் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் காரியங்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தேவையான சுய ஒழுக்கத்துடன் வாழ உதவுகிறது. பெரியவர்களாகிய நாம், நம் பெற்றோரின் கண்ணியத்தைப் பாதுகாத்து, நாம் நம்முடைய பெற்றோரை உரிய முறையில் கனம் பண்ணும் போதும், மரியாதை செலுத்தும் போதும் இவைகள் மூலமாக நம் பிள்ளைகளுக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்பிக்கிறோம். பெற்றோரை இழிவுபடுத்தும், பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியில் நடத்தாமல் இருக்கும் காலத்தில் அவர்களோடு சேர்ந்து நாமும் அப்படி செல்ல வேண்டாம். தேவனை கனம் பண்ணும் விதமாய் நம் பெற்றோரை ஆசீர்வதிப்போம், அதையே செய்ய நம் பிள்ளைகளுக்கும் கற்பிப்போம். (உங்கள் பெற்றோர்கள் தேவ பக்தியற்றவர்களாகவோ அல்லது அவதூறு செய்பவர்களாகவோ இருந்தால், உங்களது உணர்ச்சி மற்றும் ஆத்தும ஆதரவிற்காக உங்கள் திருச்சபையில் உள்ள குடும்பத்தில் இருக்கும் முதியோர்களை கண்டுக்கொள்ளுங்கள் , அதே நேரத்தில் உங்கள் சரீர பெற்றோரை கனத்துடனும் , மரியாதையாகவும், நேர்மையாகவும் முடிந்தவரை உண்மையுடனும் நடத்துங்கள்.)

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே மற்றும் நித்திய தேவனே , என் பெற்றோருக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் - சரீர பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் . அவர்கள் உம்முடைய நித்திய வீட்டிற்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்க மிகவும் தேவையானதை அவர்களுக்குக் கொடுங்கள். என் பெற்றோரிடம் என் அன்பையும் மரியாதையையும் காட்டுவதற்கு மிகவும் பொருத்தமான வழியை அறிய எனக்கு ஞானத்தைத் தாரும் . எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே , என் அன்பும் பண்பும் உம்மிடமிருந்து வருவதைக் காண அவர்களுக்கு உதவுங்கள். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து