இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல. அன்பு என்பது கிரியை . விசுவாசிகளைப் பொறுத்தவரை, இயேசுவின் மீது நமக்குள்ள அன்பைக் காட்டும் கிரியை , அவருடைய வார்த்தைகளுக்கும் , அவருடைய சித்தத்திற்கும் மற்றும் அவருடைய முன்மாதிரிக்கு நாம் கீழ்ப்படிவதே ஆகும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , இயேசுவில் உம்முடைய அன்பைக் விளங்கச்செய்ததற்காக உமக்கு நன்றி. அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வார்த்தைக்கு மதிப்பளித்து, நம் பிதாவை எப்படி நேசிப்பது என்பதை எங்களுக்குக் காட்டியதற்காக இயேசுவுக்கு நன்றி. இன்று நான் உமது விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து உணர்வோடு வாழ்வேன். என் செயல்கள், என் வார்த்தைகள் மற்றும் என் சிந்தனைகள் யாவையும் என் துதியின் காணிக்கையாகப் பெற்றுக் கொள்ளுங்கள் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து