இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பழிவாங்குதல் என்பது நமக்கு அநீதி இழைத்ததாக நாம் நினைப்பவர்களுக்கு பதிலளிக்க ஒரு மோசமான மற்றும் வேதனையான வழியாகும். நமது பலன்களுக்கு கர்த்தரே நிச்சயமாயிருக்கிறார் . அவரிடமே விட்டு விடுங்கள். அதிகரிக்கும் பழிவாங்கும் தன்மை மக்களிடமும் , வாழ்க்கையிலும் பிளவுகளையும் , இன்னுமாய் நெறியற்ற பண்புகளுக்கும் வழிவகுத்து மோசமான விளைவுகளை உண்டாக்கும் .

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே, அடியேனுக்கு எதிராக அநீதி இழைத்ததான வேளைகளிலே உம்முடைய ஆவியை பிரயோகித்து என்னை பொறுமையுள்ளவனாக்கும். நான் இரட்சிப்பை பெறுவதைக் காட்டிலும், எனக்கு அநீதி இழைத்தவர்களின் இரட்சிப்பைப் பற்றி அதிக அக்கறைக் காட்ட தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள். தயவாய் உம் குமாரனாகிய இயேசுவின் இருதயத்துக்கு ஒத்த இருதயத்தை எனக்குத் தாரும், அவருடைய நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து