இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா, என்ன நம்பமுடியாத சத்தியமும், வாக்குத்தத்தமும் உள்ள அதிக வல்லமையும் கொண்ட வாக்கியங்களின் தொகுப்பு ! நாம் பிதாவிடமிருந்து இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட வெகுமதியாயிருக்கிறோம் . தேவனின் மகிமையான முன்னிலையில் நாம் அவருடனே கூட இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். நாம் அவருடைய மகிமையை பார்க்கும்படியாகவும், அனுபவிக்கும்படியாகவும் இயேசுவானவர் விரும்புகிறார். உலக தோற்றத்துக்கு முன்பிருந்தே இயேசு தேவனால் அன்புக்கூறப்பட்டவராகவே இருக்கிறார். இவைகளைப் பற்றிச் சிந்தியுங்கள். நம்முடைய முக்கியத்துவத்தை அவர்கள் எவ்வளவு வலுவான முறையில் அவரிடம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதைக் காண்பிக்கும்படி தேவனிடம் கேட்போமாக. அவருடைய பிள்ளைகளில் ஒருவராய் தேவனுடைய மகிமையில் பங்குபெறப் போகிற அந்த நாளுக்காக தரிசனம் காண்போம்!(1யோவான் 3:1-3). இப்பொழுது, தேவன் நம் மீது கொண்டுள்ள சித்தத்தின்படியாய் நாம் வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, அப்பா பிதாவே, என்னையும், உம்முடைய பிள்ளைகளையும் சரீரப்பிரகாரமாகவும், பூமிக்குரியப் பிரகாரமாகவும் பார்த்தமைக்காக அடியேனை மன்னியும். உம்முடைய ஆவியின் மூலமாக, என்னில் மேலும் அனல்மூட்டி இயேசுவின் சீஷர்களுக்கான ஆழமான பாராட்டையும் , நாங்கள் ஒவ்வொருவரும் உமக்கு எவ்வளவு விசேஷித்தவர்கள் என்பதை புரிந்துகொள்ளவும்,எனது சொந்த தவறுகளை நான் ஏற்றுக்கொள்வதோடு, உம் கிருபையுள்ள பரிசுத்த சிங்காசனத்திற்கு முன்பாக நாங்கள் பரிபூரணத்தில் ஒன்றுபடும் நாளுக்காக ஆவலுடன் இருப்பதால், என் கிறிஸ்துக்வுகுள்ளான சகோதர சகோதரிகளின் தவறுகளை மிகவும் பொறுமையாகவும், சகிப்புத்தன்மையுடனும், மன்னிக்கவும், மதிக்கவும் தயவுசெய்து எனக்கு பெலன் கொடுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து